Thursday, May 2, 2013

வினியின் முத்துக்கள் உருவான கதை

வினியின் முத்துக்கள்  உருவான கதை:

அமெரிக்காவின் 5 வருட H4 வாழ்கையில் இப்படி வெட்டியா இருக்கோமே , எதாச்சும் பண்ணனும் , எதாச்சும் பண்ணனும்னு, பேசி பேசியே 5 வருஷமும் போச்சு. B.E Computer Science, VIT University-ல, 7 வருஷ IT Experience, எல்லாம் இருந்து என்ன பிரயோஜனம் , H1 என்கிற வஜ்ஜ்ராயுதம் இல்லையே . என்னை பொறுத்த வரைக்கும் இந்த 5 வருஷமும் எனக்கு H1 ஒரு கேலி கூத்தாவே  தான்  இருந்தது . அந்த கூத்து அப்புறம். இந்த வினியின் முத்துக்கள் ஆரம்பிச்ச கதைய இப்போ பாப்போம்.

எங்கயோ ஷாப்பிங் போய்  இருந்தப்போ, ஒரு 3 சர முத்து மாலைய (3 STRAND PEARL NECKLACE) பாத்துட்டு, அவன் $75 சொன்னான் நு கடையிலயே போட்டு அழகு பாத்துட்டு வந்தாச்சு. வீட்டுக்கு வந்தப்புறமும் மனசு அந்த முத்து மாலையவே   நினச்சுட்டு இருந்தது. அப்போதான் தோனுச்சு, வெட்டியா தானே இருக்கோம், GEMSHOW ல வாங்கின முத்து வேற கொஞ்சம் இருக்கே, ஏன் நாமே ட்ரை பண்ண கூடாதுன்னு. அதுக்கான research பண்ண ஆரம்பிச்சு , கடைசியா ஒரு முத்து மாலைய செஞ்சு முடிச்சேன். Exactly like நான் கடையில பாத்த மாதிரியே வந்துருச்சு. ரொம்ப சந்தோசம். ரொம்ப perfect அண்ட் professional ஆ இருந்ததால என் husband , ஏன் நீ இதையே ஒரு business ஆ பண்ண கூடாதுன்னு idea கொடுத்தார், அப்படி
ஆரம்பிச்சதுதான் வினியின் முத்துக்கள் - VINISPEARLS. இப்போ வர்ற orders -அ முடிக்க day & night -ஆ வேலை பண்ண வேண்டி இருக்கு.

கீழே நீங்க பாக்கற படம் தன் நான் முதல் முதலா செஞ்சது. உங்க கருத்துக்கள சொல்லுங்க. நன்றி.